கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கூட்டநெரிசல்! அதிகரிக்கும் பாதிப்புகள்!
கென்ய முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்காவின் இறுதிச் சடங்கில் கூட்டநெரிசல் ஏற்பட்டது குறித்து...
மறைந்த கென்ய முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்காவின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த, கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்கா (வயது 80), கடந்த அக்.15 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து, அவரது உடல் தனி விமானம் மூலம் கென்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைநகர் நைரோபியில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக நேற்று (அக். 16) அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது, அவருக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
Advertisement
Advertisement
இதனால், மக்களை விரட்ட காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இன்று (அக. 17) அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மீண்டும் ஆயிரக்கணக்கான கென்ய மக்கள் திரண்டுள்ளனர்.
அப்போது, அங்கு கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்ட நிலையில், நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: உலகப் போருக்காக மன்னிப்பு கோரிய ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்!
Many people have been reported to have been seriously injured in a stampede at the funeral of the late former Kenyan Prime Minister Raila Odinga.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.