கோப்புப் படம் 
உலகம்

மங்கோலியாவில் தொடரும் தட்டம்மை பரவல்! 13,500-ஐ கடந்த பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மங்கோலியா நாட்டில், தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் 13,500-க்கும் அதிகமான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மங்கோலியாவில், கடந்த சில மாதங்களாக தட்டம்மை நோயானது வேகமாகப் பரவி வருகின்றது. தொடர்ந்து, தட்டம்மை பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,532 ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மங்கோயிலாவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமார் 13,514 பேர் குணமாகியுள்ளனர். இருப்பினும், தற்போது 7 பேர் தட்டம்மை பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, தட்டம்மையானது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை அதிகம் பாதிப்பதாகவும்; குழந்தைகளை எளிதில் தாக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதில், சர்வதேச அளவில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,07,500-க்கும் அதிகமானோர் தட்டம்மை பாதிப்பினால் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உகண்டாவில் கோர விபத்து: 63 பேர் பலி!

In Mongolia, the measles outbreak is accelerating, with more than 13,500 confirmed cases.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிழைத் தோற்றங்கள்... ஹீனா கான்!

தொல்காப்பியப் பூங்கா பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டண விவரங்கள்!

லோகா ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தீபாவளி... நிக்கி தம்போலி!

ரோசா ரோசா ரோசாப்பூ... அனன்யா நாகல்லா!

SCROLL FOR NEXT