இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கைச் சென்றடைந்த 32 வயது நிரம்பிய இந்திய இளைஞரிடம் பந்தாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 2.8 கிலோ ஹெராயின் பெறப்பட்டதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் சுமார் 3.40 கோடி(இந்திய ரூபாயில் ரூ. 99 லட்சம்) என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.