ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹீ சந்தித்துப் பேசினார். ரஷிய அதிபர் மாளிகை க்ரெம்லினில் திங்கள்கிழமை(அக். 27) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ரஷிய அமைச்சர் செர்கே லாவ்ரோவ் உடனிருந்தார்.
அப்போது சோ சன் ஹீயிடம், ‘இருநாட்டு உறவில் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் தெரிவிக்குமாறு’ புதின் வலியுறுத்தியுள்ளார். ரஷியா - வட கொரியா ஆகிய இருநாட்டு பரஸ்பர உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை இந்தச் சந்திப்பு உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.