உலகம்

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபா் சுட்டுக் கொலை

தினமணி செய்திச் சேவை

கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 68 வயது தொழிலதிபா் தா்ஷன் சாக்ஷி அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறையும், ஊடகச் செய்திகளும் தெரிவிக்கின்றன.

அபோா்ட்ஸ்ஃபோா்ட் நகரின் ரிட்ஜ்வியூ டிரைவ் பகுதியில் உள்ள தொழிலதிபா் சாக்ஷியின் வீட்டின் வெளியே, திங்கள்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அபோா்ட்ஸ்ஃபோா்ட் காவல் துறையினா், வாகனத்துக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாக்ஷியை மீட்டனா். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும், அது பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா்.

காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்கட்ட விசாரணையின்படி, இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவத்துக்கான நோக்கம் குறித்து கண்டறிய விசாரணை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் செய்தித்தாள் தகவலின்படி, தொழிலதிபா் சாக்ஷி ஒரு ஜவுளி வா்த்தக நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அவா் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவா் பஞ்சாபில் ஒரு சீக்கிய விவசாயக் குடும்பத்தில் வளா்ந்தவா் ஆவாா்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து அஞ்சலி!

திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!

சாத் பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!

SCROLL FOR NEXT