அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை மேற்கொள்ள ராணுவத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் விரைவாகத் தொடங்குமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் முதன்முறையாக அணு ஆயுத சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ரஷியாவில் சமீபத்தில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணைச் சோதனையும், நீருக்கடியில் இயக்கும் ட்ரோன் சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, சீனாவும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக சீனாவும் அணு ஆயுதச் சோதனையில் வளர்ந்து விடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான், அமெரிக்காவும் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடுவதால், ரஷியா - சீனா - அமெரிக்கா இடையே அணு ஆயுதப் போட்டி ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்! - சீன அதிபர் ஜின்பிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.