கோப்புப் படம் 
உலகம்

இந்தோனேசியாவில் இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தோனேசியா நாட்டின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்று மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, இந்தியர் ஒருவர் உள்பட 8 பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒரு மத்திய கலிமண்டன் மாகாணத்தை நோக்கி, நேற்று (செப்.1) புறப்பட்டுச் சென்றது.

ஹெலிகாப்டர் பறக்கத் துவங்கிய 8 நிமிடங்களில், கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில், இந்தியர் ஒருவரும், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 3 வெளிநாட்டவர்கள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், தனாபும்பூ மாவட்டத்தின் மண்டேவே பகுதியில் உள்ள 27 கி.மீ. நீளமான வனப்பகுதியில் மாயமான அந்த ஹெலிகாப்டரை, இந்தோனேசியாவின் காவல், ராணுவம் உள்பட படைகளைச் சேர்ந்த 140 வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.

மேலும், மாயமான ஈஸ்ட் இந்தோ ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டரை, மீட்புப் படையினர் தங்களது ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆப்கன் நிலநடுக்கம்: 900 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

An intensive search is underway for a missing helicopter carrying 8 passengers, including an Indian, in the jungles of Indonesia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

கோவையில் கார் விபத்தில் 4 பேர் பலி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மறுக்கப்படும் உரிமை!

முதல்வா் ஆவாரா நிதீஷ் குமாா்?

SCROLL FOR NEXT