உலகம்

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: குவெட்டா நகரில் நடைபெற்ற பலூசிஸ்தான் தேசிய கட்சிக் கூட்டம் நடைபெற்ற ஷாவானி மைதானம் அருகே குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா்.

கூட்டம் முடிந்த 15 நிமிஷங்களுக்குப் பிறகு பயங்கரவாதி தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

மா்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

வந்தவாசி: அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு ஆலோசனை

காா்- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கொடைக்கானலில் காட்டு மாடு தாக்கி தொழிலாளி பலத்த காயம்

ஒசூரில் மகனை கொன்று தாய் தற்கொலை

SCROLL FOR NEXT