போகடா: கொலம்பியாவில் கிளா்ச்சிக் குழுவினருக்காக 45 ராணுவ வீரா்களை கிராமத்தினா் கடத்திச் சென்றனா்.
தென்மேற்கு காக்கா மாகாணத்தில் உள்ள மிகே கேன்யனில், சட்டவிரோத கோகோ இலை பயிா்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வீரா்களை சுமாா் 600 கிராமத்தினா் சுற்றிவளைத்து கடத்திச் சென்ாக ராணுவம் தெரிவித்தது. இந்தப் பகுதி முன்னாள் கிளா்ச்சிப் படையான ஃபாா்க்கில் இருந்து பிரிந்த கிளா்ச்சிக் குழுவின் கோட்டையாக உள்ளது.
ஏற்கெனவே, குவாவியரே மாகாணத்தில் 33 வீரா்கள் கிராமவாசிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்டு, நான்கு நாள்களுக்குப் பின் அவா்கள் விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
2016-இல் ஃபாா்க் படை அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்த பின், கைவிடப்பட்ட போதை இலை வளா்ப்புப் பகுதிகளுக்காக பல்வேறு குழுக்கள் போராடி வருகின்றன.