வெளிநாடுகளிலிருந்து அதிதிறன் பெற்ற ஊழியர்கள், அமெரிக்கா செல்வதற்கு மேலும் ஒரு தடைக்கல்லை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2025ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட முன்னுரிமை (இபி-1) கிரீன் கார்டு வழங்கும் எண்ணிக்கை நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது முன்னுரிமை (இபி-2) விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்ட நிலையில், இபி-1 கிரீன் கார்டு வழங்குவதற்கான கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால், நடப்பு ஆண்டில், இபி-1 மற்றும் இபி-2 விசா பிரிவின் கீழ் யாருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது என்றும், இதற்கான காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விசா விண்ணப்பங்கள் 2025 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.