உலகம்

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரா்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனா்.

இது குறித்து ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டா்-சா்வீஸஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆா்) சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நான்கு நாள்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. உளவுத் தகவலின் அடிப்படையில் பஜாவூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, மிகக் கடுமையாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் டிடிபி-யைச் சோ்ந்த 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த மோதலில் மேலும் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்; 12 வீரா்கள் உயிரிழந்தனா். தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் ஆப்கன் நாட்டவா்களும் ஈடுபட்டிருந்தனா் என்று ஐஎஸ்பிஆா் கூறியது.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT