சீனாவைச் சேர்ந்த டிக்டாக் சமூக ஊடகத் தளம் மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆட்சியில், அதாவது ஜோ பைடன் அதிபராக இருந்தபோது டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதன்பின், கடந்த தேர்தலில் வென்று டிரம்ப் இரண்டவது முறையாக அமெரிக்க அதிபரானதும் தடை உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகத்துடன் டிக்டாக் நிறுவனம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், இவ்விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்துக்கும் சீனாவுக்கும் இடையே வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் டிக் டாக் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கப் போகிறதாம். இதனை அமெரிக்க கருவூலச் செயலர்ஸ்காட் பெஸ்ஸெண்ட் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை டிக்டாக் ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த ஒப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.