ரஷியா மீது உக்ரைன் நிகழ்த்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
ரஷியாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியானதாக சமாரா ஆளுநர் சனிக்கிழமை தெரிவித்தார். அதே நேரத்தில் ரஷியா, இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியதாகவும், அதில் மூன்று பேர் பலியானதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இதுகுறித்து சமாரா ஆளுநர் வியாசெஸ்லாவ் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், நேற்று இரவு எதிரி ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் பலியானதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒருவர் காயமடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும்.
நாடு முழுவதும் இரவு நேரத் தாக்குதல்களில் மூன்று பேர் பலியானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் பகுதியில் இருந்து ஒரே இரவில் செலுத்தப்பட்ட 149 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது அல்லது இடைமறித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.