ஸெலென்ஸ்கி | டிரம்ப் AP
உலகம்

உக்ரைனின் பக்கமே இந்தியா! - அமெரிக்காவிடமிருந்து முரண்படும் ஸெலென்ஸ்கி

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கு ஸெலென்ஸ்கி எதிர்வினை!

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கு உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எதிர்வினையாற்றியுள்ளார்.

முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், உக்ரைன் போர் தொடர்ந்து நீடிக்க இந்தியாவும் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார்.

நியூயாா்க் நகரில் செவ்வாய்க்கிழமை(செப். 23) தொடங்கிய ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் டிரப்ப் பேசும்போது: “ரஷியாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மையான நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன” என்றார்.

இந்த நிலையில், இது குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அளித்துள்ளதொரு பேட்டியில் பேசும்போது, “இந்தியா, உக்ரைனின் பக்கமே பெரும்பாலாகச் செயல்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. எனினும், எரிசக்தி வணிகத்தில் ஓரிரு சவால்கள் இருக்கின்றன. அவற்றுக்குரிய தீர்வு எட்டப்பட வேண்டும். அதிபர் டிரம்ப்பால் அவற்றைச் சமாளித்துக்கொள்ள இயலும்.

நம்மால் இயன்ற அனைத்தையும் முயற்சிக்க வேண்டுமே தவிர, அதேவேளையில், இந்தியாவையும் விட்டுவிட முடியாது. அவர்கள்(இந்தியா) ரஷியாவின் எரிசக்தி துறையைச் சார்ந்திருக்கும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்வர்.

இந்தியாவுடன் ஐரோப்பிய நாடுகள் மேலும் நெருக்கமாக ஒத்துழைத்து இணக்கமாகச் செயல்படுவது, இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்ற உதவி செய்யும்” என்றார்.

Ukrainian President Volodymyr Zelenskyy said "India is mostly with Ukraine", differing with his American counterpart, Donald Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!

கட்டுமரக்காரன் பாடல்!

ஓஜி டிரெய்லர்!

அழகிய கனவே... ரெபா!

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

SCROLL FOR NEXT