பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)
உலகம்

அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!

6 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்க அதிபரை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகையில் சந்திக்கின்றார்...

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வாஷிங்டன் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க பிரதமர் ஷரீஃப், நியூயார்க்கில் இருந்து நாளை (செப். 25) வாஷிங்டன் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் நாளையே மீண்டும் நியூயார்க் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில், முதல்முறை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கின்றார். இறுதியாக, 2019 ஆம் ஆண்டின் ஜூலையில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்.

முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், தனது ஆட்சியில் பாகிஸ்தான் அரசுடனான உறவுகளை முற்றிலும் புறக்கணித்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பின்னர் மீண்டும் பதவியேற்ற அதிபர் டிரம்ப், வெளிப்படையாக பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

Pakistani Prime Minister Shahbaz Sharif is reportedly traveling to Washington to meet US President Donald Trump.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

களைகட்டிய நவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்

நெஞ்சை சூறையாடும்... ரிதிகா!

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!

வட சென்னை 2: படப்பிடிப்பு, ரிலீஸ் அப்டேட் பகிர்ந்த தனுஷ்!

SCROLL FOR NEXT