வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
லாங்சி மாவட்டத்தின் கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 அலகுகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தின்போது ஒருசில மேற்கூரை ஓடுகள் சிதறி வீடுகளின் முது விழுந்ததாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. இதில் ஏழு பேர் காயமடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை.
மாகாண தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையப்பகுதி இருந்தது.
எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று மாநில ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்துள்ளது.
அவசர பணியாளர்கள் சேதமடைந்த வீடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.