காஸா போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் அதிபர் டிரம்ப் இன்று 6வது முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதற்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு நெதன்யாகு வருகை புரிந்துள்ளார்.
காஸா போர் நிறுத்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்பதைக் குறிப்பிடும் வகையில் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை எனக் கூறப்படும் நிலையில், இதில் போர் நிறுத்தம் தொடர்பாக முடிவு எட்டப்படும் என்ற நம்ப்பிக்கை உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினரை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதாபிமானமற்ற முறையில் முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது வரை உலக நாடுகளிடையே 7 போரை நிறுத்தியுள்ளதாகக் கூறும் அதிபர் டிரம்ப், காஸா போர் நிறுத்தம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
அமெரிக்கா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இதற்காக வெள்ளை மாளிகைக்கு வருகைபுரிந்துள்ள நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்று, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.