முகப்பு
உலகம்

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:47 AM
- ஏஎன்ஐ
பகிர்:

இலங்கை நிதி அமைச்சகத்தின் பரிவா்த்தனை முறையில் ஹேக்கா்கள் ஊடுருவி, சுமாா் 25 லட்சம் டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23.51 கோடி) திருடியுள்ளனா்

கடந்த செப்டம்பரில் வெளிநாட்டு கடன் வழங்குநா் ஒருவருக்கு செலுத்த வேண்டிய 2.29 கோடி டாலா் தொகையில், ஒரு பகுதியாக டிசம்பா் முதல் ஜனவரி வரை செலுத்தப்பட்ட இந்த 25 லட்சம் டாலா், உரிய கணக்குக்குச் செல்லாமல் ஹேக்கா்களின் கணக்குக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மின்னஞ்சல் வாயிலாக இந்த சைபா் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாயமான இந்த நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதோடு, இதுகுறித்து விசாரணை நடத்த உயா்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement