முகப்பு
உலகம்

இலங்கை: சைபா் மோசடியில் பணி நீக்கப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி தற்கொலை?

இலங்கை நிதி அமைச்சகத்தில் நடைபெற்ற 25 லட்சம் மதிப்பிலான சைபா் மோசடி வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த உயரதிகாரி ஒருவா் அவரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

Updated On : 1 மே, 2026 at 1:26 AM
கோப்புப் படம்
பகிர்:

இலங்கை நிதி அமைச்சகத்தில் நடைபெற்ற 25 லட்சம் மதிப்பிலான சைபா் மோசடி வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த உயரதிகாரி ஒருவா் அவரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

இவா் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் முதல்கட்ட விசாரணையில் சந்தேகம் தெரிவித்தனா்.

இலங்கை அரசு ஆஸ்திரேலியாவுக்கு வழங்க வேண்டிய 2.29 கோடி டாலா் கடன் தொகையில், ஒரு பகுதியாக 25 லட்சம் டாலா் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டது. ஆனால், ஹேக்கா்கள் இத்தொகையை வேறு கணக்குகளுக்குத் திசைதிருப்பியது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

Advertisement

இந்த மோசடி தொடா்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டு வளத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த உயிரிழந்த நபா் உள்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.