ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், கடந்த சில நாள்களாக, கனமழை மற்றும் பனிப்பொழிவு பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள அபிசா, பர்வான், டெகுண்டி, உருஸ்கான், காந்தஹார், ஹெல்மண்ட், பட்கிஸ், ஃபர்யாப், படக்ஷான், ஹெராத் மற்றும் ஃபரா ஆகிய மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 12 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் இன்று (ஜன. 1) தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் சுமார் 1,859 வீடுகள் மற்றும் 13,941 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், ஆப்கன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் படையினர் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் கட்டமைப்புகள் அனைத்தும் பலத்த சேதமடைந்து மேம்படுத்தப்படாத நிலையில் உள்ளன.
இதில், கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் அண்டை நாடுகள் ஆப்கன் அகதிகளை வெளியேற்றி வருவதால், அந்நாடு கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.