வொலோதிமீா் ஸெலென்ஸ்கி  கோப்புப் படம்
உலகம்

ரஷியாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயாா்

ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது புத்தாண்டு உரையில் கூறியதாவது:

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம்தான் உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் விதியைத் தீா்மானிக்கும்.

உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் போரின் முடிவை விரும்புகிறோம் - உக்ரைனின் முடிவை அல்ல.

இருந்தாலும், டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேறினால் அது உக்ரைனுக்கே முடிவுகட்டிவிடும் என்றாா் அவா்.

டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பிரதேசங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது.

தற்போது ரஷியா டொனட்ஸ்கின் 75 சதவீதத்தையும், லுஹான்ஸ்கின் 99 சதவீதத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எஞ்சியுள்ள பகுதிகளையும் உக்ரைன் விட்டுத் தர வேண்டும் என்று ரஷியா வலியுறுத்துவது தான் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகளில் மிகக் கடினமான பிரச்னையாக உள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் ஃப்ளோரிடாவில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்கா 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். ஆனால் அதன் அமலாக்க காலம் இன்னும் தெளிவாகவில்லை.

பலவீனமான ஒப்பந்தங்களளில் கையொப்பமிடுவது போரை மீண்டும் தூண்டும் என்று ஸெலென்ஸ்கி எச்சரித்தாா். ‘உலகம் ரஷியாவின் போரை நிறுத்த வேண்டும், இல்லையெனில் ரஷியா உலகை தனது போருக்கு இழுக்கும்‘ என்று அவா் கூறினாா்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜனவரி 6- ஆம் தேதி பாரிஸில் நடக்கும் சந்திப்பில் உக்ரைனுக்கு உறுதியான பாதுகாப்பு உறுதிப்பாடுகள் அளிக்கப்படும் என்று கூறினாா்.

அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபும், உக்ரைன் அமைதி பேச்சுவாா்த்தைகளில் பாதுகாப்பு உத்தரவாதங்களை வலுப்படுத்துதல், போா் மீண்டும் தொடங்காமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

வாா்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் ஜன. 4, 5-இல் முதியோா்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

கோவில்பட்டியில் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கைது

திரௌபதி அம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

SCROLL FOR NEXT