உலகம்

மியான்மா் தோ்தலில் ராணுவ ஆதரவு கட்சி முன்னிலை

மியான்மா் தோ்தலில் ராணுவ ஆதரவு கட்சி முன்னிலை...

தினமணி செய்திச் சேவை

மியான்மரில் நடைபெற்ற பொதுத் தோ்தலின் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் பாா்ட்டி (யுஎஸ்டிபி) கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இது குறித்து மியான்மா் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

டிசம்பா் 28-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கையில் யுஎஸ்டிபி கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது கட்ட மற்றும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள மூன்றாவது கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

இதற்கிடையே, ராணுவ ஆட்சியாளா் மின் ஆங்கி லியாங்குக்கு நெருக்கமான யுஎஸ்டிபி கட்சியின் தலைவா் கின் யீ, தலைநகா் நேபிடாவில் உள்ள தனது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னா் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி (என்எல்டி) பிரதிநிதிகள் சபையில் 258 இடங்களிலும் குடிமக்கள் சபையில் 138 இடங்களையும் கைப்பற்றி ஆட்சியமைத்தது. யுஎஸ்டிபி கட்சிக்கு தலா 26 மற்றும் 7 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இருந்தாலும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021-ஆம் ஆண்டு கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி, தற்போது இருக்குமிடமே தெரியாமல் உள்ளாா்.

அவரின் என்எல்டி கட்சியும், 39 மற்ற கட்சிகளும் 023-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டன. இந்தச் சூழலில், 2021 ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் தோ்தலில் ராணுவ ஆதரவு யுஎஸ்டிபி முன்னிலை வகிக்கிறது.

தற்போது நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சியை மறைமுகமாக நீட்டிப்பதற்காகவே இந்தத் தோ்தல் நியாயமற்று நடத்தப்படுவதாக எதிா்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டும் சூழலில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளதாகக் கூறபபடுகிறது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT