எரிமலை (கோப்புப் படம்) AFP
உலகம்

பிலிப்பின்ஸில் எரிமலை வெடிப்பு! உச்சக்கட்ட அபாயம்!!

பிலிப்பின்ஸ் நாட்டில் எரிமலை வெடிப்பால் 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள மாயோன் எரிமலையில் சிறிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 3,000-க்கும் அதிகமான கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாகாணமான அல்பேவில் உள்ள மாயோன் எரிமலைக்கு விடுக்கப்பட்டிருந்த 5 ஆம் நிலை எச்சரிக்கையை, செவ்வாய்க்கிழமை (ஜன. 6) 3 ஆவது நிலையாக உயர்த்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக, மாயோன் எரிமலையின் உச்சியில் இருந்து அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுவதாலும், வெளியேறும் சாம்பல் மற்றும் வாயுக்காளினாலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் முழுவதுமாக வெடிக்கக் கூடும் எனும் அபாயம் நிலவுவதால், அப்பகுதியில் வசிக்கும் 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,800-க்கும் அதிகமான கிராமவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்துடன், அபாயப் பகுதிக்கு வெளியே வசிக்கும் மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த 600 கிராமவாசிகளும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பிலிப்பின்ஸ் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான 2,462 மீட்டர் உயரமுள்ள மாயோன் எரிமலையானது கடந்த 1616 ஆம் ஆண்டு முதல் 54 முறைகள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Due to minor eruptions at the Mayon volcano in the Philippines, more than 3,000 villagers living in the area have been evacuated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீது மோகன்தாஸ் பெண்கள் முன்னேற்றத்திற்கான குறியீடு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 26

தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை! பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீஸ் இல்லை!!

ஆனந்த வாழ்வு தரும் ஆனைமுகன்

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீர்கள்: தமிம் இக்பால்

SCROLL FOR NEXT