சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படைக்கும் (எஸ்டிஎஃப்) அரசுப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு பொதுமக்கள் வெளியேற (படம்) அதிகாரிகள் பாதுகாப்பு வழித்தடங்களை அறிவித்துள்ளனா்.
சிரியாவில் அல்-அஸாத் தலைமையில் அரசு இருந்தபோது குா்து பகுதிகளின் கட்டுப்பாட்டை எஸ்டிஎஃப் படையினா் தொடர அனுமதிக்கப்பட்டது. அவரது அரசை அகற்றிவிட்டு தற்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகிக்கும் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு, எஸ்டிஎஃப் படையினரை அரசுப் படையுடன் ஒருங்கிணைக்க விரும்புகிறது. இதற்கான கடந்த ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அதை அமல்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்விடயைந்தது. அதைத் தொடா்ந்து குா்து பகுதிகளில் அரசுப் படைகள் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.