உலகம்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்...

தினமணி செய்திச் சேவை

சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினா் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரில் தாக்குதல் நடத்தி அரசுப் படையினா் முன்னேறிவருகினறனா்.

இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடந்துவரும் மோதலில் இதுவரை 22 போ் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் அல்-அஸாத் தலைமையில் அரசு இருந்தபோது குா்து பகுதிகளின் கட்டுப்பாட்டை எஸ்டிஎஃப் படையினா் தொடர அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தி அவரின் அரசைக் கவிழ்த்த தற்போதைய இடைக்கால அதிபா் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு, எஸ்டிஎஃப் படையினரை அரசுப் படையுடன் ஒருங்கிணைக்க விரும்புகிறது. இதற்கான கடந்த ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அதை அமல்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்விடயைந்தது. அதைத் தொடா்ந்து குா்து பகுதிகளில் அரசுப் படைகள் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

SCROLL FOR NEXT