தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்ததில் புதன்கிழமை காலை 22 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து உபோன் ராட்சத்தானி மாகாணத்துக்கு 195 பயணிகளுடன் இன்று காலை 9.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) ரயில் சென்றுகொண்டிருந்தது.
பாங்காக்கிற்குத் வடகிழக்கே உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேக ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்த ராட்சத கிரேன் தண்டவாளத்தில் சரிந்து விழுந்துள்ளது.
அப்போது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது கிரேன் விழுந்ததில், ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 22 பேர் பலியானதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங் பகுதியுடன் இணைக்கும் அதிவேக ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. சுமார் 540 கோடி டாலர்கள் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.