கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அதிபர் டிரம்ப் பேசுகையில், "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதால், கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கக் கூடும்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக டிரம்ப் அரசு உருவாக்கி வரும் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என்று கூறிவரும் டிரம்ப், அதனைக் கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மேலும், இதற்கு ஆதரவளிப்பதில் நேட்டோ அமைப்பு முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் டிரம்ப், நேட்டோவின் ராணுவ செயல்திறன் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.