கிரீன்லாந்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது 10 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டன், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஃபின்லாந்து அகிய நாடுகள் மீது 10 சதவிகித வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மீதான இந்த 10 சதவிகித வரி விதிப்பு பிப்ரவரியின் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருவது மட்டுமின்றி, ஜூன் முதல் தேதியில் 25 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என்று டிரம்ப் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இருப்பினும், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புதான் தெரிவித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.