பாஸ்போர்ட் கிடைக்காததால் தாயகம் திரும்ப முடியாமல் ஈரானிலுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அரசு தங்களுக்கு உதவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருவதைக் குறிப்பிட்டு, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனைத்திந்திய மருத்துவ மாணவர்கள் சங்கம் (ஏஐஎம்எஸ்ஏ) கடிதம் எழுதி மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : ‘ஈரானில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து, அங்குள்ள வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப தயாராக உள்ளனர். ஆனால், அவர்களுடைய பாஸ்போர்ட்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் இருப்பதால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இவ்விவகாரத்தில் இந்திய உயர் ஆணையரகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உதவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.