முகப்பு
உலகம்

அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!

அரபு லீக்கின் தலைமைப் பதவிக்கு பெரும் சவாலான சூழலில் பதவியேற்கவுள்ளார் நபில் ஃபாஹ்மி.

Updated On : 30 மார்ச், 2026 at 1:39 PM
அரபு லீக் - IANS
பகிர்:

அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலராக எகிப்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் நபில் ஃபாஹ்மி (75) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுச்செயலர் பதவி வகிக்கும் எகிப்து நாட்டைச் சேர்ந்த அகமது அபுல் கெய்ட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த பொதுச்செயலரைத் தேர்ந்தெடுக்க காணொலி வழியாக நடைபெற்ற அரபு லீக் உறுப்பினர் நாடுகள் கவுன்சிலின் 165-ஆவது பொதுக்கூட்டத்தில், நபில் ஃபாஹ்மியை பொதுச்செயலர் பதவியில் நியமிக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அவர் ஜூலையில் பொறுபேற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் அப்பதவி வகிப்பார்.

நபில் ஃபாஹ்மி

அமெரிக்காவுக்கான எகிப்து தூதர் உள்பட தூதரக ரீதியாக பல்வேறு உயர்பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர் நபில் ஃபாஹ்மி.ஈரான் மீதான தாக்குதல்களாலும் அவற்றுக்கான அந்நாட்டின் எதிர்வினை தாக்குதல்களாலும் அரேபிய வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரபு லீக்கின் தலைமைப் பதவிக்கு பெரும் சவாலான சூழலில் பதவியேற்கவுள்ளார் நபில் ஃபாஹ்மி.

summary

The Council of the League of Arab League States has unanimously approved Egypt’s nomination of former foreign minister Nabil Fahmy as the next Secretary-General of the Arab League for a five-year term beginning July 1, 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.