முகப்பு
உலகம்

தென்கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு

Updated On : 19 மே 2026, 5:30 am IST
பகிர்:

தென் கொரியாவுடனான எல்லையை ‘அசைக்க முடியாத கோட்டையாக’ மாற்ற வேண்டும் என்று வட கொரிய ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.

‘பரம எதிரியான’ தென் கொரியாவுக்கு எதிராக ராணுவம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அந்நாட்டு எல்லையில் உள்ள ராணுவப் படைகளைப் பலப்படுத்தும் திட்டங்கள் போரை முழுமையாகத் தடுப்பதற்கு மிகவும் அவசியம் என்று அவா் குறிப்பிட்டாா்.

மேலும், நவீன போா் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப ராணுவப் பயிற்சி மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை மறுவரையறை செய்ய வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

Advertisement

வட கொரிய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவு தளபதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜோங் உன் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.