
சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை விடியோ மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் சமீபத்தில் 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்தப் படம் இன்றளவும் சினிமா ரசிகர்களால் முக்கியமான படமாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க: சோனாலி போகாட் வழக்கு: கோவா விடுதிக்கு விரைந்தனர் சிபிஐ
சசிகுமார் நடிப்பில் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன், காரி போன்ற படங்கள் தயாராகிவருகின்றன. இதில் காமன் மேன் படத் தலைப்பு நான் மிருகமாய் மாற என மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் செந்துார் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்: ஜெயவர்தனே
இந்தப் படத்தை கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படம் அக்டோபரில் வெளியாகுமெ என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.