
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கல்யாணத்தில் அழுத ஜவான் பட நடிகை!
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சிவகாா்த்திகேயனின் மாவீரன் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.
இந்நிலையில் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இலவச அனுமதி சீட்டுக்கு ஒரு வாய்ப்பினை அறிவித்துள்ளது. அயலானில் ஏலியன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்திருப்பது யார் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சரியான பதில் சொல்பவர்களுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
டிச.26ஆம் தேதி அயலான் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.