டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விஜய் பேசியதென்ன? அமரன் பட இயக்குநர் நெகிழ்ச்சி!

அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் நடிகர் விஜய் பேசியதாவது...

News image

நடிகர் விஜய், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - படம்: எக்ஸ் / ராஜ்குமார் பெரியசாமி

Updated On :29 நவம்பர் 2024, 11:33 am IST

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 150 கோடியையும் உலகளவில் ரூ. 300 கோடியையும் வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமரன் திரைப்படத்தை நடிகர் விஜய் பாராட்டியிருந்தார். விஜய் என்ன கூறினார் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது:

அமரன் படம் முன்பே வெளியாகி இருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது படத்தைப் பற்றி உலகமே சொல்கிறது. உன்னை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது என விஜய் கூறியதாகக் கூறினார்.

பின்னர் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினை பார்த்து ரசித்ததாகவும் புதிய புகைப்படம் ஒன்றினை எடுத்ததாகவும் கூறினார்.

நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அரசியலில் ஈடுபடவிருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷுடன் இணைந்து புதிய படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.