

சாய் பல்லவியின் பாலிவுட் படம்: நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகும் “ஏக் தின்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி, நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் உருவாகும் “ஏக் தின்” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார்.
இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் உருவாகும், இந்தப் படத்தில் நடிகர் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கின்றார். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பளர் ராம் சம்பத் இசையமைக்கின்றார்.
இந்த நிலையில், ஏக் தின் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் இன்று (ஜன. 15) வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை (ஜன. 16) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இத்துடன், இந்தப் படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் “ராமாயணா” பாகம் 1 மற்றும் பாகம் 2 திரைப்படங்களில் நடிகை சாய் பல்லவி “சீதை” கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.