முதல்வராகும் மம்தா: ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

DIN 3rd May 2021 08:22 PM

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உரிமை கோரினார். 

திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவராக தேர்வான நிலையில், ஆளுநரை சந்தித்து மம்தா உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளார்.