எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பாஜக எம்.பியின் காலைக் கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்: அதிர்ச்சி சம்பவம் (விடியோ) 

ஜார்கண்ட் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாஜக எம்.பியின் காலைக் கழுவி அந்த நீரை தொண்டர் ஒருவர் குடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:17 pm IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாஜக எம்.பியின் காலைக் கழுவி அந்த நீரை தொண்டர் ஒருவர் குடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் கோடா தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் நிஷிகாந்த் துபே.  இவர் ஞாயிறன்று அவரது தொகுதியில் உள்ள கன்பரா என்னும் இடத்தில் பாலம் ஒன்றைக் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்வில் பவன் ஷாஹு என்னும் தொண்டர் ஒருவர் மேடையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், எம்.பி நிஷிகாந்த் துபேயின் கால்களை தட்டு ஒன்றில் வைத்து நீர் ஊற்றிக் கழுவினார். பின்னர் அவரது கால்களை துணி ஒன்றினை வைத்து துடைத்தவர், பின்னர் அந்த நீரை அப்படியே கையில் ஊற்றிப் பருகினார். பின் தலையிலும் தடவிக் கொண்டார்.    இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக கன்பரா பகுதிவாசியான பவன் ஷாஹு கடந்த 2014-ஆம் ஆண்டு, இந்த பகுதிக்கு யார் பாலம் கட்டித் தருகிறார்களோ, அவர்களது காலைக்கழுவி அந்நீரைக் குடிக்கத் தயார் என்று உறுதி எடுத்திருந்தார் என்று தெரிய வருகிறது. .         

இது தொடர்பான விடியோவை நிஷிகாந்த் துபே தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன் பவனின் செயலைப் புகழ்ந்து எழுதியிருந்தார்  அதற்கு சமூக வலைதளங்களில் பரவலான எதிர்ப்புகள் வந்த பின்னரும்,  தனது கருத்தில் உறுதியாக இருந்தார். அத்துடன் விருந்தினரின் காலைக் கழுவுவது என்பது ஆதிவாசிகள் மத்தயில் ஒரு மரியாதை நிமித்தமான சடங்கு என்றும், அதனை அரசியலாக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். 

ஆனால் சிறிதுநேரத்தில் அந்த முகநூல் பதிவில் பவன் தனது காலைக் கழுவிய நீரைக் குடித்தார் என்ற தகவலை மட்டும் நீக்கி விட்டார் அதற்குப் பிறகு தான் யாரையும் அவ்வாறு நடந்து கொள்ளுமாறு கூறவில்லை என்று மறுத்தும் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.