உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 10 பேர்பலி!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Published On :

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு மாலேயில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

இதுகுறித்து மாலத்தீவு தீயணைத்து துறை அதிகாரி கூறுகையில், 

அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தரைதளத்தில் வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது கட்டடத்தின் மேல் தளத்திற்குப் பரவியது. இதில் 10 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 

தீயை அணைக்க சுமார் 4 மணி நேரம் போராடியதாக அவர் தெரிவித்தார். 

உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் தகவல்களை வெளியுறவுத்துறை சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.