Jaipur
Jaipur

ஜெய்ப்பூர் தீ விபத்தில் பலி 13 ஆக உயர்வு!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
Published on

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் வாகனங்கள் பெட்ரோல் நிரப்புவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தன.

அப்போது ரசாயனங்கள் நிரப்பிய லாரி ஒன்று, பிற வாகனங்கள் மீது மோதியதில் 30 லாரிகள் உள்பட பல வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தன.

இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்; காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com