இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகையானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்.21 ஆம் தேதி இரவு ஜெய்ப்பூர் வந்தடைந்த அவர்கள் நேற்று (ஏப்.22) வரலாற்று சிறப்புமிக்க அமெர் கோட்டையைக்குச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப்.23) அவர்களை நேரில் சந்தித்து வரவேற்றார். பின்னர், ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக துணை அதிபர் வேன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றிப்பார்த்தனர்.
இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகர மாளிகைக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரையில் வழங்கப்படாத நிலையில் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலினால் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தற்போது, ஜெய்ப்பூரின் ராம்பார்க் ஓட்டலில் தங்கியுள்ள துணை அதிபர் வேன்ஸின் குடும்பம் நாளை காலை 6.30 மணியளவில் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளனர்.
முன்னதாக, துணை அதிபர் வேன்ஸின் வருகை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்று ஜெய்ப்பூர் மாளிகை மக்கள் பார்வைக்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகம் யார் பக்கம்?

குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருகை

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்க துணை அதிபர்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



