பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மது அருந்தும்போது மோதல்: உருட்டுக் கட்டையால் தாக்கியதில் எலெக்ட்ரிசியன் பலி!

மன்னார்குடியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பலியான எலெக்ட்ரிசியன்.

mannarkudi

கொலையான ஜெயநாராயணன் - DIN

Published On :

மன்னார்குடியில் மது அருந்தும்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், உருட்டுக் கட்டையால் தாக்கியதில் எலெக்ட்ரிசியன் பலியானார்.

மன்னார்குடி தென் வடல் காகிதப்பட்டறை தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், அதிமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சத்யா இவர்களது மகன் ஜெய நாராயணன் (39) தனியார் எலெக்ட்ரிசியனாக வேலைப் பார்த்து வந்துள்ளார். அவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.

சனிக்கிழமை நள்ளிரவு, ஜெயநாராயணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பந்தலடி பகுதியில் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அதே பகுதியில் வேறொரு தரப்பினர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதில், ஜெயநாராயணன் தனது வீட்டுக்கு செல்வதற்காக பவுண்ட் சந்து என்ற இடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஜெயநாராயணனை உருட்டுக் கட்டையாலும் செங்கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் .

இதில், பலத்த காயமடைந்த ஜெயநாராயணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு பலியானார்.

இது குறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.