கோவை வந்தார் விஜய்: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.


தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும்(ஏப். 26, 27) நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்துள்ளார் விஜய். விமான நிலையத்தில் முன்னதாகவே ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர்.
விமான நிலையத்திற்கு வந்த விஜய், பிரசார வானத்தில் ஏறியபடி தொண்டர்களுக்கு கையசைத்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்றார். வழிநெடுக தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

அப்போது தொண்டர்கள், பிரசார வானத்தில் ஏறி விஜய்யிடம் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க | கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...