பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

 ராயபுரம், தண்டையார்பேட்டையைத் தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..

 
 

அமெரிக்காவில் மேலும் 425 பேர் பலி; மொத்த உயிரிழப்பு 1.22 லட்சமாக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 425 பேர் பலியாகியுள்ளனர்.  இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,22,610 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தாராவியில் இன்று வெறும் 5 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி

மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,214 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 3,947 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,947 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மேலும் 7 பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா உறுதி

புதிதாக 7 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா தொற்று: கேரள, கர்நாடக மாநில நிலவரங்கள்

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய இன்றைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,136 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,136 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா: 800-ஐத் தாண்டியது பலி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,516 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 7,425 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,425 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,99,705 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,946 பேருக்கு கரோனா; மேலும் 105 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,946 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,85,034 ஆக அதிகரித்துள்ளது.  விரிவான செய்திக்கு..

 
 

நாட்டில் கரோனா பாதிப்பில் தமிழகம் 3-ம் இடம்; பலியில் 4-ம் இடம்

 நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகம், பலி எண்ணிக்கையில் 4-ம் இடத்தில் உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் பதிவான 445 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 186 போ் பலியாகினா். தில்லியில் 63 போ், தமிழகத்தில் 53 பேரும், உத்தர பிரதேசத்தில் 25 பேரும், குஜராத்தில் 15 பேரும் அடங்குவர். விரிவான செய்திக்கு..

செங்கல்பட்டில் இன்று மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

கோவாவில் கரோனா தொற்றுக்கு முதல் பலி

கோவாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். 

உலகளவில் கரோனா பாதிப்பு 90.51 லட்சத்தைத் தாண்டியது!

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 90.51 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 305 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

தண்டையார்பேட்டையில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியது: மண்டலவாரியாக விவரம்

 சென்னையில் தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு கரோனா இல்லை: சுகாதாரத் துறை தகவல்

 தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அவருக்கு கரோனா தொற்று இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

சாா்பு ஆய்வாளருக்கு கரோனா : காவல் நிலையம் மூடல்; பேருந்து நிலையத்துக்கு தற்காலிகமாக இட மாற்றம்

 தேனி மாவட்டம் சின்னமனூரில் சாா்பு ஆய்வாளருக்கு கரோனா தொற்று பரவியதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கா்நாடகத்தில் 9 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

 கா்நாடகத்தில் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,150 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி

 கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு 5ஆவது முறையாக ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,10,461லிருந்து 4,25,282 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 2,909 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,909 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,721 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 62 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா

மும்பை தாராவிப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 1,487, பிற மாவட்டங்களில் 1,223 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) சென்னையில் மட்டும் 1,487 பேருக்கும், பிற மாவட்டங்களில் 1,223 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் 138, கர்நாடகத்தில் புதிதாக 249 பேருக்கு கரோனா

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் 138, கர்நாடகத்தில் புதிதாக 249 பேருக்கு கரோனா

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 2,710 பேருக்கு தொற்று; பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,710 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பொது வார்டுக்கு மாற்றப்பட்டார் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர்

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 55 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவு

ஒவ்வொரு 1 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கரோனா பாதிப்பு என்ற கணக்கீட்டில், இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பரிசோதனை 3 மடங்கு அதிகரிப்பு; நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்:கேஜரிவால் 

 கரோனா பாதித்து வீட்டிலேயே தனித்து வைக்கப்படுவோருக்கு அரசு சார்பில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30-ம் தேதி வரை முழு பொதுமுடக்கம்

 சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

நாட்டில் கரோனா மீட்பு விகிதம் 55.77% ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,600 பேருக்கு தொற்று; மேலும் 95 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,92,280 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

சென்னை மாநகராட்சியில் வார்டுதோறும் தலா 2 மருத்துவ முகாம்கள்: ஆணையர் பிரகாஷ் பேட்டி

200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 
 

சிங்கப்பூரில் ஒருநாள் பாதிப்பு குறைந்தது! கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com