எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தெய்வப்புலவர் திருவாய்மொழி (திருக்குறள் விளக்கவுரை)

ஒவ்வொரு குறளிலும் ஒரு புதிய பொருள் புரியும் வகையில் நூலாசிரியர் புதிய கோணத்தில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியிருப்பதுடன், அதை தற்காலத்திலும் எளிதில் புரியும் வகையிலும் எழுதியிருப்பதால் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் படிக்க வேண்டிய நூலாகவுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:16 pm IST

தெய்வப்புலவர் திருவாய்மொழி (திருக்குறள் விளக்கவுரை)- பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக். 656; ரூ. 850; முல்லைப் பதிப்பகம், சென்னை- 600 040. ✆ 98403 58301.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட  திருக்குறளுக்கு நவீன காலத்துக்கும் ஏற்ப விளக்கவுரை எழுத முடிகிறதென்றால்  அதன் சமுதாய தீர்க்க தரிசனத்தை நாம் உணரலாம்.  பேராசிரியர் அரங்க.  ராமலிங்கத்தின் விளக்கவுரை மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதைப் படித்தால் புரிந்துகொள்ளலாம். திருக்குறளில் திரு என்பதன்  பொருளை  சங்க இலக்கியத்தைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது தொடங்கி, அதை அறநூலாக  பார்ப்பதற்கான காரணத்தையும் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 கடவுள் வாழ்த்தில் 'மலர்மிசை ஏகினான்' எனும் குறள் விளக்கத்தில் மலர்மிசை என்பதை இறைவனின் அடியார்களின்  உள்ளத்தைக் குறிப்பிட்டு இருப்பதைக் கூறலாம்.   'துப்பார்க்குத் துப்பாய' எனும் குறளை விளக்கும் நூலாசிரியர் மழை நீரே பல நோய் தீர்க்கும் மருந்தாகக் குறிப்பிட்டு தற்கால நீர் மருத்துவத்தை  நினைவூட்டுவது பாராட்டத்தக்கது.

'செயற்கரிய செய்வார்' எனும் குறளில் செய்வதற்கு அரிய செயலைச் செய்தல்  என்பதையே பலரும் விளக்கிவந்துள்ளனர். இந்நூலாசிரியரோ  செயல்படுத்துவதற்கு அரியனவாகக்  கூறப்படும் துறவறத்தை மேற்கொள்வோரை  பெரியோர் எனக் குறிப்பிட்டிருப்பதும் பொருள் புதிதாக உள்ளது. 

 இப்படியாக ஒவ்வொரு குறளிலும்  ஒரு புதிய பொருள் புரியும் வகையில் நூலாசிரியர் புதிய கோணத்தில் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியிருப்பதுடன், அதை தற்காலத்திலும்  எளிதில் புரியும் வகையிலும்  எழுதியிருப்பதால் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் படிக்க வேண்டிய  நூலாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.