சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

யு-19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது.

News image
- படம் | ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (எக்ஸ்)
Updated On :8 டிசம்பர் 2024, 12:57 pm

DIN

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (டிசம்பர் 8) துபையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேச அணி முதலில் விளையாடியது.

198 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதலில் விளையாடிய வங்கதேசம் 49.1 ஓவர்களின் முடிவில் 198 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஸான் ஹொசைன் 47 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, முகமது ஷிகாப் ஜேம்ஸ் 40 ரன்களும், ஃபரித் ஹாசன் ஃபைசல் 39 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் யுதாஜித் குஹா, சேட்டன் சர்மா, ஹார்திக் ராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிரண் ஜோர்மெல், கார்த்திகேயா மற்றும் ஆயுஷ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

வங்கதேசம் சாம்பியன்

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 35.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கேப்டன் முகமது அமான் 26 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஹார்திக் ராஜ் 24 ரன்கள் எடுத்தும், கார்த்திகேயா 21 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

139 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழக்க, வங்கதேசம் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

வங்கதேசம் தரப்பில் கேப்டன் அஸிஸுல் ஹக்கீம் தமிம் மற்றும் இக்பால் ஹொசைன் தலா 3 விக்கெடுட்டுகளைக் கைப்பற்றினர். அல் ஃபாகத் 2 விக்கெட்டுகளையும், மரூஃப் மிரிதா, ரிஸான் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இக்பால் ஹொசைன் இமான் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.