2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்ற ஸ்மிருதி மந்தனா!
கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் போட்டிகளுக்கான வீராங்கனை விருதினை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா - படம் | ஐசிசி
கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் போட்டிகளுக்கான வீராங்கனை விருதினை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா, கடந்த ஆண்டு 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் ஸ்மிருதி மந்தனா குவித்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையும் ஸ்மிருதி மந்தனாவையேச் சேரும். அவர் கடந்த ஆண்டில் மட்டும் 747 ரன்கள் குவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, லாரா வோல்வர்ட் (697 ரன்கள்), டம்மி பீமௌண்ட் (554 ரன்கள்) மற்றும் ஹேலி மேத்யூஸ் (469 ரன்கள்) ஆகியோர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

