செஸ் ஒலிம்பியாட்: முக்கியமான ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு
செஸ் ஒலிம்பியாடில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என...


சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஆர்மீனியாவுக்கு எதிரான 6-வது சுற்றில் இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியா பி, ஆர்மீனியா அணிகள் மட்டுமே இதுவரை தோல்வியடையாமல் உள்ளன. இரு அணிகளும் 5 ஆட்டங்களில் 10 புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களில் உள்ளன.
இன்று நடைபெறும் 6-வது சுற்றில் இந்தியா பி அணியும் ஆர்மீனியாவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்திய பி வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆர்மீனியாவுக்கு எதிராக குகேஷ், நிஹல் சரின், அதிபன், ருனாக் சத்வனி ஆகியோர் விளையாடுகிறார்கள்.
சென்னை செஸ் ஒலிம்பியாடில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா இரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என ஓரளவு நன்றாகவே விளையாடியுள்ளார். எனினும் அவருடைய திறமைக்கு அவர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...