எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சிதம்பரம் கொலை  வழக்கு: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

சிதம்பரம் கொலை  வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 7:00 pm IST


சிதம்பரம்: சிதம்பரம் கொலை  வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவரின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியதால் இதற்கு இடையூறாக இருந்த கணவர் சம்பத் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர்பாஷா என்பவரின் உதவியுடன் கடந்த 30.8.2013-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கார் ஏற்றி கொலை செய்து அந்த கொலையை விபத்தாக மாற்றுவதற்கு மூவரும் முயற்சி செய்தனர். 

இதனை திறன்பட புலனாய்வு செய்த அப்போதைய சிதம்பரம் உள்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தகுந்த சாட்சியத்துடன் நடந்தது விபத்து இல்லை என்று கண்டறிந்து மூவரையும் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

பின்னர் இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், மூவரும் நீதிமன்ற பினை பெற்று வெளியே சென்றனர். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் மூவருக்கும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. பிடியானை நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் இருந்ததால் வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாத நிலையில் இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்.ராஜாராம்  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலை மறைவு குற்றவாளிகளை பிடிக்க சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர்  பி.ரகுபதி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம் மங்கலம்பேட்டை சென்னை கன்னியாகுமரி பெங்களூரு போன்ற இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது,  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கின் மூன்றாவது எதிரி அமீர் பாஷா என்பவரை தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தினர்.

இந்தநிலையில், வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் (42)மற்றும் கிரண் ரூபிணி (36) ஆகியோர் கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

தகவலின்படி, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் சிறப்பு உதவியாளர் புருஷோத்தமன் தலைமை காவலர் ரமேஷ், ராமநாதன் பெண் காவலர்கள் சுதா, புனிதா ஆகியோர் பெங்களூரு சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து சிதம்பர நகர காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் திறன்பட புலனாய்வு செய்து வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தனிப்படையை தொடர்ந்து கண்காணித்து இரண்டு எதிரிகளையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.