தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

பட்ஜெட் 2026: புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! நிதித்துறை செயலாளர் விளக்கம்!

2026 தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து நிதித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

News image

நிதித்துறை செயலாளர் சித்திக் - DIPR

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:22 pm IST

2026 தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் இன்று (ஆக. 5) விளக்கம் அளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் சித்திக் பேசியதாவது:

தமிழக வருவாய் கணக்கு பற்றாக்குறை ரூ. 55,775 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

மூலதன செலவுகள் ரூ. 56,985 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பற்றாக்குறை ரூ. 1.22 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பல புதிய திட்டங்களை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி இம்முறை பட்ஜெட்டில் 200 யூனிட் இலவச மின்சாரத்துக்காக ரூ. 1,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 6082 கோடியும்,

அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ. 812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ரூ. 560 கோடி,

வெற்றி வீடு ரூ. 1000 கோடி,

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு ரூ. 313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக சாலைகள் புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 504 கோடி, ஊரகப் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு வெற்றி இயக்கத்துக்கு ரூ. 2203 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சித்திக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், நிதி நிலைமை மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. வரவுகளை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் தனது அறிக்கையில் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ளதால், வரிகளை உயர்த்தும் திட்டம் இல்லை.

கடந்த முறை 10 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை இருந்தது. மாநில அரசின் கடன் சுமை கடந்த முறை 3.4% ஆக இருந்தது. இந்த ஆண்டு கடனை அதிகமாக உயர்த்தாததால் 3.17% ஆக குறையும்.

பள்ளிக் கல்வித் துறையில் எந்தவொரு திட்டங்களும் குறைக்கப்படவில்லை. மதிப்பீட்டில் ஊதியம் அதிகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை சரி செய்துள்ளோம். கல்வித் துறையில் பெரும்பாலும் எந்தவொரு திட்டங்களும் குறைக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 42,351 கோடி செலவானது. இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 48,531 கோடி ஒதுக்கப்பட்டது. ஓராண்டில் 6 ஆயிரம் கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு காரணமும் திட்டமும் இல்லாததால், அதனை சரி செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

Summary

Budget 2026 Details of funds allocated for new schemes! Finance Secretary's explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.