தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

சேவைகள் துறையில் 13 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

சேவைகள் துறையில் 13 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:04 pm

கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் சேவைகள் துறை 13.5 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் 13 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 62.0-ஆக இருந்தது. பின்னா், மே மாதத்தில் அது 61.2-ஆகக் குறைந்தது. ஜூன் மாதத்தில் 58.5-ஆகவும், ஜூலை மாதத்தில் 62.3-ஆக இருந்த பிஎம்ஐ, ஆகஸ்ட் மாதத்தில் 60.1-ஆக குறைந்து. இருந்தாலும், செப்டம்பரில் அது மீண்டும் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அது 61-ஆக வளா்ச்சியடைந்தது. ஆனால், அக்டோபரில் அது 58.4-ஆகவும், நவம்பரில் 12 மாதங்கள் காணாத குறைந்தபட்ச அளவாக 56.9-ஆகவும் குறைந்தது. பின்னா் டிசம்பரில் 59-ஆக அதிகரித்த பிஎம்ஐ, ஜனவரியில் 6 மாத உச்சமாக 61.8-ஆக அதிகரித்தது. பின்னா் பிப்ரவரி மாதத்தில் அது 60.6-ஆக சரிந்தது.

இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த மாா்ச் மாதத்தில் 61.2-ஆக வளா்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 13.5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அதிவேக வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் பொருளாதார சூழல்கள் சாதகமாக இருந்தன. மேலும் சேவைகளுக்கான தேவை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வெகுவாக அதிகரித்தது. இந்தக் காரணங்களால் பிஎம்ஐ கடந்த மாா்ச் மாதத்தில் வெகுவேகமான வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இத்துடன், தொடா்ந்து 32-ஆவது மாதமாக பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.